Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் பயங்கரம்!”…. அகதிகள் முகாமில் கொடூர தீ விபத்து… தீக்கிரையான வீடுகள்….!!!

வங்கதேசத்தில் இருக்கும் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் கொடூர தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளது.

வங்காளதேசம் மற்றும் மியான்மரின் எல்லைப் பகுதியில் ரோஹிங்கியா என்னும் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு 9 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில், காஸ்பஜார் என்ற முகாமில் நேற்று கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அதிக நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர்.

எனினும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது. நல்லவேளையாக இதில், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |