Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. மளமளவென பற்றி எரிந்த தீ…. திருப்பூரில் பரபரப்பு…!!

தனியார் நூல் மில்லில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூர் பகுதியில் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் தனியார் மில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மில்லில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள கழிவுப் பஞ்சு சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பஞ்சுகள் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |