மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மளிகை கடை ஒன்றை ரயில்வே பீடர் சாலையில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மளிகை கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணன் அக்கம்பக்கத்தினர் உதவியோடு நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து விட்டார். ஆனால் இந்த தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.