ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைத்து விட்டனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டலை பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் சாகுல் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த ஹோட்டல் திறக்கவில்லை. இந்நிலையில் திடீரென இந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹோட்டலில் இருந்து புகை வருவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றிய தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் ஹோட்டலில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.