நள்ளிரவு நேரத்தில் குடிசை பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அம்மாபட்டி பகுதியில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஒரு குடிசை அமைத்து அதில் சில பொருட்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த குடிசை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடிசையும், அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.