Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்தில் என்ன ஆகிருக்கும்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் கீழ் மதுரை பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

மேலும் அப்பகுதியில் வைக்கோல்போருக்கு அருகிலேயே மின்கம்பம் இருந்ததால் விபரீதம் ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். ஆனால் அதற்குள் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Categories

Tech |