திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிப்காட் தொழில்பேட்டையில் இருந்த பழைய தனியார் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிடங்கில் இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய்களில் கொழுந்துவிட்டு தீ எரிந்து வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். கரும்புகையுடன் எரியும் தீயை அணைக்க 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.