துபாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருக்கும் Jebel Ali என்ற துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து தீ பற்றி எறிந்துள்ளது. கோடைகாலம் என்பதால் அதிக வெப்ப நிலை நிலவி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரியும் வகையில் இருந்த பொருட்கள் உள்ள கண்டெய்னர்கள் வெடித்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/disclosetv/status/1412867416191819778
இது வழக்கமாக நிகழும் விபத்து தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நல்லவேளையாக விபத்தில் எவரும் காயமடையவில்லை. மேலும் கப்பலில் உண்டான தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.