மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (MTNL )கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் பதறிப்போயினர். அவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து 14 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடத்தின் மேல் உச்சியில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் அவர்களை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.