செங்குன்றம் அருகே தண்டல் பழனியில் உள்ள 2 தனியார் கிடங்குகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
செங்குன்றம் அருகே தண்டல் பழனியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ பற்றி மளமளவென எரிந்து அருகிலிருந்த மரச்சாமான் கிடங்கிற்கும் பரவியது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் எண்ணெய் கிடங்கு முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
ஆனால் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைபோன்று மதுரையிலும் தனியார் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நள்ளிரவில் பற்றிய தீ வளாகம் முழுவதும் பரவியது 10-திற்க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.