Categories
உலக செய்திகள்

கியூபா தூதரகத்தில் பற்றி எரிந்த தீ.. பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்.. வெளியான புகைப்படம்..!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கியூபா தூதரகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் வளாகம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருக்கும் கியூபா தூதரகம், தங்கள் வளாகத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. அதாவது இத்தூதரகத்தில், பெட்ரோல் குண்டுகளை மர்மநபர்கள் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வளாகம் முழுவதும் பற்றி எரிந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நல்ல வேளையாக, இத்தாக்குதலில் எவரும் பாதிக்கப்படவில்லை என்று தூதரகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். எனினும் கியூபா வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |