Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணுங்க… தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தீயணைப்பு துறையினர் எவ்வாறெல்லாம் தீ விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக “தீயணைப்பு தொண்டு வாரம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி தீயணைப்பு நிலையம் மூலம் தீயணைப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறும்போது, வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர்களை கவனமாக உபயோகிக்க வேண்டும் எனவும், ஒருவேளை தீப்பிடித்தால் கீழே படுத்து தரையில் உருள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சமையலறையில் காலியாக இருந்தாலும் இரண்டு சிலிண்டர்களை பக்கத்தில் வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின் மாணவ மாணவிகளுக்கு தீ விபத்தின் போது எப்படி வெளியேற வேண்டும் எனவும், தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்த வகுப்புகளை வாரம் ஒருமுறை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |