சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள முள்ளங்குடி கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி 15 நாட்களான நிலையில் இவர்கள் இருவரும் அவர்களது நண்பர்களான வசந்த் மற்றும் தினேஷ் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து ஒரே காரில் மேட்டூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தலைவாசல் அருகே இருக்கும் நத்தக்கரை சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காரிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போது சுங்கச்சாவடியில் இருந்த தீயணைப்பானை கொண்டு காரில் பற்றிய தீயை ஊழியர்கள் அணைத்துள்ளனர். இதனால் காரிலிருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.