டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இதில் அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த உயர் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் முதன்மை கட்டிடத்தின் முதல் தளம் , இரண்டாம் தளம் ஆகியவற்றில் தீடிரென தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் எழுந்த புகை மூட்டத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயை கட்டுப்படுத்த டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 34 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.