அமெரிக்க நாட்டின் அணை ஒன்றில் பற்றி எரியும் பயங்கர தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் நேவடா என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ஹூவர் என்ற அணையில் தீ பற்றி எரிந்தது. கரும்புகையுடன் தீ அதிக அளவில் எரிந்து கொண்டிருக்கிறது. எனவே, தீயணைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறார்கள். அந்த அணையில் இருக்கும் டர்பைன் ஹவுசில் இருக்கும் மின்மாற்றியில் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய டர்பைன் கவுசல் இருக்கும் மின்மாற்றியில் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.