சேலம் மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு வண்டிக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் அங்கிருந்த மெத்தைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.