Categories
உலக செய்திகள்

மக்களே அலட்சியமா இருக்காதீங்க!…. “செல்லப்பிராணிகளால் ஆபத்து?”…. எச்சரிக்கும் நிபுணர்கள்….!!!!

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் குடும்பங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தென்கொரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாகவும், அதற்கு காரணம் செல்லப்பிராணிகள் தான் என்று கூறப்படுகிறது. மேலும் சியோல் பெருநகர தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2021-ஆம் ஆண்டு வரையில் சுமார் 107 வீடுகளில் பூனைகளால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே நிபுணர்கள், பூனைகள் Hotplate சாதனங்களின் மேற்பரப்பில் இருக்கும் தொடு உணர் பொத்தான்களை தெரியாமல் தொடுகின்றன. இதனால் வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றில், Hotplate சாதனங்களை பயன்பாட்டில் அதிக நேரம் வைத்திருந்தாலும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளனர். எனவே செல்லப்பிராணிகளை கொண்ட குடும்பங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |