Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டு செய்யும் சமையல் அறையில் தீ விபத்து……!!!

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலின் அருகில் அமைந்துள்ள லட்டு செய்யும், பூந்தி சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே இடதுபுறத்தில் உள்ள பூந்தி சமைக்கும் அறையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள அறையின் மேல் பகுதி வரையிலும்  தீ பற்றி எரிந்தது.

Image result for tirupathi temple fire accident

இதையடுத்து, தகவலின்பேரில் 2 தீயணைப்பு வாகனத்துடன் அங்கு வந்த வீரர்கள் 15 நிமிடங்களில் தீயை அணைத்து முடித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவிதமான  பாதிப்பும்  ஏற்படவில்லை என்றும்,பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |