ராணிப்பேட்டையில் சுமார் 20,000 சவுக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் அளவிலான சவுக்கு மர தோப்பு உள்ளது. இந்நிலையில் ராஜியினுடைய சவுக்கு மர தோப்பு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கலவை தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அத்தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலையத்தினுடைய அலுவலரான பரிமளாதேவியின் தலைமையிலான வீரர்களும், மீட்பு பணி குழுவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் சுமார் 20 ஆயிரம் சவுக்கு மரம் தீயில் கருகியது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.