Categories
உலக செய்திகள்

இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா…? தீயில் உருக்குலைந்த போர்க்கப்பல்…. கடலில் குதித்து உயிர் பிழைத்த மாலுமிகள்….!!

ஈரான் நாட்டின் கப்பற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஈரான் நாட்டுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியது முதல் இருநாடுகளுக்குமிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பக்கம் இருக்கிறது. மேலும் மோதலின் காரணத்தால் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே கப்பல் செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச நாடுகளினுடைய எண்ணெய் கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களின் மீது யார் என்று தெரியாதவாறு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஈரான் தான் காரணமென்று வளைகுடா நாடுகளும், அமெரிக்காவும் குற்றம் சாட்டி வரும் நிலையில் ஈரான் அக்குற்றத்தை ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில ஈரான் நாட்டின் கப்பல் படைக்கு பாத்தியப்பட்ட கார்க் என்ற போர் கப்பல் ஓமன் வளைகுடாவிலிருக்கும் ஹார்மோஸ் ஜலசந்திக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து கப்பல் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இத்தீயை கப்பலில் இருக்கும் தீயணைப்பு வீரர்கள் அணைப்பதற்கு முற்பட்டும் கூட நொடி பொழுதில் கப்பல் முழுவதும் தீ பரவியது. இந்நிலையில் கப்பலில் இருந்த மாலுமிகள் உயிர்காக்கும் ஆடையை அணிந்து கொண்டு கடலில் குதித்தனர். இதனையடுத்து தீயினால் உருக்குலைந்த கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து கப்பலில் தீப்பிடித்ததற்கான காரணத்தை ஈரான் கப்பற்படை தெரிவிக்காததால் இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |