Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரராஜ் வயது 45 . இவர் விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார்.நேற்று வீரராஜ் வேலைக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

இதனை தினமும் நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் நுழைந்தனர். இன்று காலை வீட்டிற்கு வந்த சங்கீதா வீட்டின் முன்புறம் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் .2 லட்சம் ரூபாய் வரை கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன்  டி.எஸ்.பி. ராஜா தலைமையில்  இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் வரவழைக்கப்பட்ட  தடயவியல் துறை அதிகாரிகள் கொள்ளையடிக்கப்பட்ட  வீட்டை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வீடுகள் அதிகமாகவும் நெருக்கமாக உள்ள இடத்தில்  இரவு நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |