வயலில் மேய்ந்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராவத்தநல்லூர் பகுதியில் அம்மாவாசை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் சொந்த பசுமாடு ஓன்று விவசாய நிலம் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வயலில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் அங்கே திரண்டு வந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டுள்ளனர்.