Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுதாரித்துக்கொண்ட டிரைவர்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று மகேந்திரன் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் தீப்பெட்டி கழிவுகளை விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாசி பகுதிக்கு ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பன்னீர் தெப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் சரக்கு வாகனத்தில் இருந்த டிரைவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு மகேந்திரன் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து சரக்கு வாகனம் மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது. இது குறித்து மகேந்திரன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். அதன்பிறகு சரக்கு வாகனம் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |