விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 20 முதல் எவையெல்லாம் இயங்கும் என ஊரடங்கு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி , கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் என் கூறியிருந்தது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள 956 பட்டாசு ஆலைகளும் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்க மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதி வழங்கியுள்ளார்.