வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கூட தீபாவளி பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம் மாநிலத்தை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தில் இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.