32 வயதான ரஷ்ய நபர் சனிக்கிழமை இரவு தனது குடியிருப்பின் அருகில் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்கோவின் யெலட்மா கிராமத்தில் 32 வயதான ரஷ்ய நபரின் அபார்ட்மெண்டிற்கு வெளியே 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கூட்டமாக கூடிநின்று சத்தமாக பேசிகொண்டியிருந்தனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக உருவானது, பின்னர் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது வேட்டை துப்பாக்கியை எடுத்து, வீட்டில் இருந்து வெளியே வந்து , அவர்களை நோக்கி சுட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக யாசான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.