Categories
அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு – ரூ..5லட்சம் கூடுதல் நிவாரணம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியான வழியில் நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையின் இன்றைய விவாதத்தின் போது பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,

இதில் யார்யாரெல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் கூண்டில் ஏற்றப்படுவார்கள்,  தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் விவாதத்தில் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |