எலான் மஸ்கின் கருத்துக்கு பிரபல நாட்டு அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் ரஷியா ஆக்கிரமித்த அனைத்து உக்ரைன் பகுதிகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறினார். இதனை கேட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது. நீங்கள் எங்கள் நாட்டிற்கு நேரடியாக வந்து பாருங்கள். ரஷியா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை. அதன் பின்னர் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து எனக்கு ஆலோசனை வழங்குங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.