Categories
மாநில செய்திகள்

FIRST பாலியல் தொழில்…. NEXT கொள்ளை அடிச்சோம்…. பிளானை மாற்றியது எதற்காக?…. 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் முதல் தெருவில் குமார் சுப்பிரமணியன்(61) வசித்து வருகிறார். முன்னாள் விமானப்படை அதிகாரியான இவர் சென்ற மாதம் தன் மனைவியோடு சுற்றுலாவுக்காக வட மாநிலங்களுக்கு சென்றுள்ளார். இவருடைய மகனும் கடந்த மாதம் 25ம் தேதி பணி நிமித்தமாக புனேவுக்கு சென்றுவிட்டு, பிறகு 26 ஆம் தேதி காலை சென்னை வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 சவரன் தங்கநகைகள், பலலட்சம் மதிப்புள்ள வைரநகைகள், பணம், லேப்டாப் மற்றும் மின்னணு பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மகன் அளித்த தகவலின்படி குமார் சுப்பிரமணியன் தன் மனைவியோடு சென்னை வந்துள்ளார். இது தொடர்பாக அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குட்டி (எ) சிவவிநாயகம்(43) என்பவரை கைது செய்தனர். அத்துடன் அவரிடமிருந்த 17 சவரன் நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நண்பர்களுடன் கூட்டாக கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்ததை அடுத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த உலகநாதன்(44) மற்றும் நித்தியா(32) போன்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதுமட்டுமின்றி நகைகளை சேலத்திலுள்ள தனியார் நகைக் கடையில் விற்பனை செய்ததாக தெரிவித்தார். அதன்பின் காவல்துறையினர் அந்த நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது தற்போது கைதான 3 பேரும் இதற்கு முன்பாக பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், அடிக்கடி போலீஸ் கைது செய்து வந்ததால் மாற்று தொழிலாக சென்ற 2017-ம் வருடம் முதல் கொள்ளையடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பின் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காவல்துறையினர், கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்வதற்கு உதவியாக இருந்த நித்யாவின் நண்பர் ரமேஷை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Categories

Tech |