அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கருப்பின பெண் நீதிபதியாக பதவியேற்கவிருக்கிறார்.
அமெரிக்காவிலுள்ள உச்சநீதிமன்றத்தில் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற கருப்பின பெண் முதல் தடவையாக நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பிறகு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார்.
இதற்கான வாக்கெடுப்பு இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியில், கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்ததற்கு ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்கள் 94% இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் 6% மட்டுமே உள்ள கறுப்பின ஆப்பிரிக்கர் நீதிபதி ஆவதா? என்று விமர்சனம் செய்தனர். எனவே, தற்போது அவர்களின் வாக்கு ஜாக்சனுக்கு இருக்காது. மீதமுள்ள குடியரசுக் கட்சியினர் இவருக்கு வாக்களித்தால் செனட் குழுவால் அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார்.