டோங்கா என்ற தீவு நாடு, முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.
நியூசிலாந்திலிருந்து நேற்று விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தான் டோங்கா தீவு நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் சில நாடுகள், கொரோனா தொற்றை பரவ விடாமல், தடுத்துவிட்டது.
அதில் டோங்கா தீவும் ஒன்று. இத்தனை நாட்களாக கொரோனோவை பரவ விடாமல் தடுத்துக்கொண்டிருந்த டோங்கோவில், தற்போது முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. டோங்கோவின் பிரதமரான Pohiva Tu’i’onetoa, வானொலியில், நியூசிலாந்திலிருந்து வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்ததை உறுதி செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று நியூசிலாந்தில் உள்ள Christchurch என்ற நகரத்திலிருந்து விமானத்தில் டோங்காவிற்கு வந்த ஒரு பயணிக்கு தான் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சுமார் 215 பயணிகள் அந்த விமானத்தில் இருந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அந்த நபர், தற்போது ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று பிரதமர் கூறியுள்ளார்.