சீனாவில் ஒரு வருடத்திற்கு பின் முதல் தடவையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீன நாட்டில் முதல் முறையாக கடந்த 2019-ஆம் வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுக்க பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனாவில் பல மாதங்களாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வருடம் கழித்து நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இரண்டு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.