விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நாளை வெளியாகும் இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் முதல் காட்சிக்கான ரசிகர்களிடையே ஆர்வம் இருந்துவந்த நிலையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் முன் பதிவு செய்து விட்டதாகவும் படம் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
First day first show booked 😍 #Bigil #BigilDiwali ❤️❤️ can’t wait !!
— Yashika Anand (@iamyashikaanand) October 23, 2019