Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக விமானப்படையில் முதல் இந்து பைலட்!

பாகிஸ்தானின் வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டின் விமானப்படையில் ஒரு இந்து விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தான் விமானப்படையில் பொது கடமை பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிந்து மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டமான தார்பார்கரைச் சேர்ந்தவர் ராகுல் தேவ், அப்பகுதியில் இந்து சமூகத்தை சேர்ந்த  பெரும்பாலான  மக்கள் வசித்துவருகின்றனர்.

இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி  கூறுகையில்; தேவின் நியமனம்  மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதுபோல சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் சிவில் சேவையிலும் இராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்து சமூகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறுபான்மையினர் மீது அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தினால், வரும் நாட்களில் பல ராகுல் தேவ்ஸ் நாட்டுக்கு சேவை செய்யத் தயாராக இருப்பார் என்று அவர் கூறினார்.

Categories

Tech |