பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி பபன்ரா பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்தது மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய பா.ஜனதாவின் முன்னணி தலைவரும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான பபன்ராவ் லோனிகர் சமீபத்தில் ஜல்னா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது விவசாயிகள் நிதியுதவி பெறுவது பற்றி பேசினார் . ‘அவ்வாறு அவர் பேசுகையில் அரசிடம் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விரும்பினால், நாம் பர்தூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடலாம்.
இதில் அவர் பேசியது : முன்னாள் மந்திரிகளை பங்கேற்க வைக்கலாம். அத்துடன் ஒரு கதாநாயகியை அழைக்கலாம். இல்லையென்றால் நமது தாசில்தார் ‘மேடத்தை’ அழைக்கலாம்’ என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும் பபன்ராவின் இந்த பேச்சுகள் அடங்கிய ஆடியோ பதிவு மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பா.ஜனதா கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பபன்ராவ், சிறப்பாக பணி செய்பவர்களை கதாநாயகன், கதாநாயகி என்று அழைப்பது இயல்பான ஒன்றுதான் .நான் அந்த அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும், தனது பேச்சின் மூலம் யாரையும் அவமதிக்கவில்லை என்றும் கூறினார்.