Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரே இது நல்லா இல்ல…! எங்க மேல மட்டும் கேஸ் போடுறீங்க… ஈபிஎஸ் டீம்மை போட்டு கொடுக்கும் ஓபிஎஸ் டீம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திரும்பத் திரும்ப தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது நல்லா இல்ல. இரண்டாவது விஷயம் உங்களிடம் வேண்டுகோள் என்னவென்றால், அங்கு பேசினால் கைது செய்கிறீர்கள், எங்க மேல் எஃப் ஐ ஆர் போடுகிறீர்கள். சிபிசிஐடியை எடுத்துக் கொள்வோம் என்று உடனே சிபிஐ போய் விடுவோம் என்றுசொல்கிறீர்கள்.

எல்லாம் சரிதான் நான் இல்லை என்று சொல்லவில்லை, ஏன் ஒரு பக்கமாக வருகிறது ? என்ன காரணம் என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.உங்கள் மீது ரொம்ப மரியாதை உண்டு. எத்தனையோ பார்த்துவிட்டு வந்து விட்டோம் எங்கள் வாழ்க்கையில். முதல்வர் நேற்று முன் தினம் பேசும்போது சொல்கிறார், எத்தனையோ இடையூறுகளை சந்தித்து முன்னேறி வந்தவன், அதே நேரத்தில் எங்களை பற்றி பேசுவதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அதைத்தான் கேட்கிறோம் மாண்புமிகு முதல்வரிடத்தில், ஒரு பக்கம் தான் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொரு பக்கம் வேடிக்கை பார்க்கிறது, இது தவறு. இரவோடு இரவாக கைது செய்கிறார்கள், இங்கே பேசி முடிப்பதற்குள் whatsapp-இல் வரல. உதயகுமாருக்கு ஆதரவாக உடனே கைது. வீட்டை சூறையாடுவேன் என்று சொல்லிட்டு வந்த போது இந்த கவர்மெண்ட் உளவுத்துறைக்கு தெரியாம போச்சா? அப்போ ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.

தேனியில் போய் சூறையாடுவேன் என்கிறார் ரவுடி மாதிரி. இங்கே வந்து நிற்கட்டும் ஜெயக்குமார். தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறீர்கள், இன்றைக்கு இதோட போதும்பா நிறுத்திக்கலாம்,  நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுறீங்க தான… நீங்கள் இனிமேல் தினமும் செய்தியாளர்களை சந்தித்தால், சென்னையில் நானும் செய்தியாளர்களை சந்தித்து உங்களுக்கு கவுண்டர் பதில் சொல்லுவேன்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் இங்கே வாருங்கள் ஆரம்பத்திலிருந்து போலாம் 1792இல் இருந்து போகலாம். நீங்க என்ன சொல்லுறீங்க ? நான் என்ன சொல்லுறேன்னு பாப்போம். நான் தயாரா இருக்கேன். உங்களை திரும்ப, திரும்ப எச்சரிக்கிறேன், இதோடு நிறுத்திக்கோங்க என ஜெய்குமாருக்கு பதிலடி கொடுத்தார்.

Categories

Tech |