Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீட் தேர்வில் முதலிடம்… கலக்கிய திருப்பூர் மாணவன்…. அசத்திய நாமக்கல் மாணவி …!!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 14.37 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் எழுதிய நீட் தேர்வின் முடிவுகளை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார்.

இத்தேர்வில் மொத்தமுள்ள 720 மதிப்பெண்ணுக்கு 710 மதிப்பெண் பெற்று திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடத்தையும் இந்தியா அளவில் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த மாணவன் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 380 மதிப்பெண்கள் எடுத்தநிலையில் தொடர் முயற்சியின் மூலம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதேபோல் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி மோகனபிரபா 705 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.  நீட் முடிவுகள் வந்த சில நிமிடங்களிலேயே பள்ளி வளாகத்தில் மாநிலத்தில் முதல், இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விளம்பரப் பதாகைகள் தயார் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |