காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி அவர்கள் இன்று சென்னை வந்த பொழுது சென்னையில் சிறப்பு விருந்தினராக தனியார் கல்லூரி ஒன்றில் அழைக்கப்பட்டார் இதனை தொடர்ந்து அங்கு சென்ற அவர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்
சென்னையில் தனியார் கல்லூரியான ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி அங்கே பயிலும் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில்கள் அளித்து பேசிவந்தார் இதனை தொடர்ந்து அங்கு உள்ள ஒரு மாணவி கல்லூரிகளுக்கு காங்கிரஸ் கட்சி நிதி ஒதுக்கீடு செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார் இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்,
கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்குவதை விட கல்லூரி நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளித்து அதனை முழு சுதந்திரத்துடன் இயங்க விடுவதே ஜனநாயக நாட்டின் முதல் கடமையாகும் அது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நிச்சயமாக நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்
மேலும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய பாஜக கட்சியை விமர்சனம் செய்தார் அந்த கூட்டத்தில் பாஜக தனது ஐந்தாண்டு ஆட்சியில் செய்த குற்றங்கள் அனைத்தையும் நாம் ஆராய்ந்து பார்த்து நாடாளுமன்றத் தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று அவர் பெண்கள் மத்தியில் உரையாற்றினார் மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக முன்னுரிமை அளிக்கும் மாநிலமாக தமிழகம் முதல் இடத்தை வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்…