உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி,
- அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்துமதிப்புடன் இருக்கின்றார்.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ் இரண்டாமிடத்தில் 8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கின்றார்.
- எல்விஎம்எஸ் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் மூன்றாமிடத்தில் 6 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார்.
- ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜூகர்பெர்க் நான்காம் இடத்தில் 5 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கின்றார்.
- பெர்க்சயர்ஹேத்தவே தலைவர் வாரன் பப்பட் ஐந்தாம் இடத்தில் 5 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கின்றார்