Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: மயாங்க் அகர்வால் மீண்டும் சதம் – இந்தியா அபாரம்

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார்.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுள் ஹாக் 37 ரன்கள் அடித்தனர்.இந்திய பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷமி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்திருந்தது.

இதனிடையே இன்று மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் புஜாரா 43 ரன்களுடனும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

Mayank

பின்னர் மயாங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ரஹானே பொறுமையாக வங்கதேச பந்துவீச்சை எதிர்கொண்டார். தொடர்ந்து அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 21ஆவது அரைசதத்தைக் கடந்தார். மறுபுறம் அவ்வபோது பவுண்டரியும், சிக்சரையும் விளாசிக் கொண்டிருந்த மயாங்க் அகர்வால் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை எட்டினார். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே இருந்தது. இவர்களை பிரிக்க முடியாமல் வங்கதேச பவுலர்கள் திக்குமுக்காடினர். மேலும் இப்போட்டியில் ரஹானே டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்த வீரர் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

தொடர்ந்து ஆடிய மயாங்க் 150 ரன்களைக் கடந்தார். இந்திய அணி தேநீர் இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 303 ரன்களை எடுத்து வங்கதேசத்தைக் காட்டிலும் 153 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. மயாங்க் அகர்வால் 156 ரன்களுடனும், ரஹானே 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளையும் அபு ஜெயீத்தே கைப்பற்றினார்.

Categories

Tech |