Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: ரிஷப் பண்ட களமிறங்குவார் – கோலி அறிவிப்பு…!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி அறிவித்துள்ளார். நானும் ரஹானேவும்  ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். அவர் பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார். அணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |