அண்ணாத்த படம் முடிவடைய தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் தற்போது தெலுங்கில் படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன் “மாநகரம்”,”கைதி ” என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியதற்கு அப்படங்களின் வெற்றியே காரணம். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ரஜினி நடிக்கும் “அண்ணாத்த” படம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். எனவே இந்த இரண்டு மாதத்தில் குறுகிய பட்ஜெட்டில் ஒரு தெலுங்கு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு படத்தை முடித்து விட்டு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என பேசப்படுகிறது.