இந்திய விற்பனையில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் இந்திய விற்பனையில் 15,000 யூனிட்களை கடந்துள்ளது. மேலும், பத்து மாதங்களில் 650சிசி பிரிவில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதுமட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த 650சிசி பிரிவில் இதன் விலை இந்தியாவில் மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் அதிநவீன கிளாசிக் தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் ரேசர் தீம், இன்டர்செப்டர் 650 மாடலில் ஸ்கிராம்ப்ளர் வடிவம் கொண்ட கிளாசிக் தோற்றத்தையும், இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிள் 60களில் பிரபலமான இன்டர்செப்டார் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் கஃபே ரேசர் கொண்டுள்ள வடிவமைப்பு 1950களில் பிரபலமாக இருந்த கான்டினென்டல் ஜி.டி. 250 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டது ஆகும். இதைத்தொடர்ந்து, ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களில் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.