திமுக எடுத்துரைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல் நிலைமை முற்றிய பிறகு அதனை பின்பற்றுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடந்த செய்தியாளர்களுடன் நடந்த இணையவழி பத்திரிகையாளர் சந்திப்ப நடத்தினார். அதில்கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்திலிருந்து இது அரசியலுக்கான நேரமில்லை மக்கள் நலனே மிக முக்கியம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து. அந்த எண்ணத்தில்தான் திமுக தொடர்ந்து இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில்தான் திமுகழகம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. திமுக ஆக்கபூர்வமான முழு ஆதரவினை வழங்கியும், அதிமுக அரசு முதலில் இருந்து தொடர்ந்து நிராகரித்து கொண்டிருக்கிறது.
10ஆம் வகுப்பு தேர்வு:
ஆனால் மக்களுக்கு கொரோனா பணியாற்ற வேண்டிய கடமையையில் திராவிட முன்னேற்றக் கழகம் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. அதே நேரத்தில் அதிமுக அரசு கொரோனா குளறுபடிகளை செய்து அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்துரைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல் நிலைமை முற்றிய பிறகு அதனை பின்பற்றுகிறது தமிழக அரசு. பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவையுங்க என்று சொன்னோம். ஆனால் பிடிவாதமாக தமிழக அரசு மறுத்தது. பின்னர் ஒத்திவைத்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது.
அனைவருக்கும் முக கவசம்:
நடமாடும் மருத்துவமனை அமையுங்கள் என்று சொன்னோம். இப்பொழுது தான் செய்கிறார்கள். அனைவருக்கும் முக கவசம் கொடுங்கள் என்று சொன்னோம். அனைவருக்கும் இது தேவையில்லை என்று சட்டமன்றத்தில் சொன்னாங்க, முதலமைச்சர் சொன்னாரு, அமைச்சர் சொன்னார். ஆனா இன்னைக்கு அனைவருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லுறாங்க. இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். உண்மைகளை மறைத்து வெளிப்படைத் தன்மை ஏதும் கடைபிடிக்காமல் இன்றைக்கு மக்களின் உயிருக்கு ஆபத்தை அதிமுக அரசு தொடர்ந்து ஏற்படுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது.
மக்கள் உயிருக்கு பேராபது:
ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு மாறாக அதிமுக அரசு அலட்சியமாக, ஆணவமாக மாறாக மட்டுமே செயல்பட்டுள்ளது. ஒரு அரசு முக்கிய முடிவுகள் எடுக்கவும், அதற்கான திட்டமிடலுக்கும் உண்மை தகவல்கள் தான் மிக மிக முக்கியம். அதைவிட முக்கியமாக இத்தகைய பேரிடர் காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முடிவு எடுக்கவும், துல்லியமான தரவுகள் மிகமிக அவசியம். பேரிடரை கையளவேண்டிய அரசின் பொறுப்பற்ற தனிமையினால் மக்கள் உயிருக்கு பேராபத்தை சந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தமிழக அரசை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.