கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுகொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் எரியானது. அப்பகுதி விவசாயம் மற்றும் குடிநீருக்கும், சென்னை நகரின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் ஏழு முறை நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்பிறகு நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் அனக்கரை வடவாறு வழியாக வினாடிக்கு 1,668 கனஅடி வீதம் காவிரிநீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் இன்று 15.6 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டி எரியானது நிரம்பியுள்ளது.