Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் திருப்பதி, நெக்ஸ்ட் தர்கா”…. இசை புயலுடன் சேர்ந்து நடிகர் ரஜினி வழிபாடு…. நெகிழ்ச்சி தருணம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா உடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இன்று அதிகாலை ரஜினி திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நிலையில் பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் ரஜினியை பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் 6 வருடங்களுக்குப் பிறகு ஏழுமலையானை தரிசனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்‌. மேலும் திருப்பதியில் தரிசனத்தை முடித்த பிறகு நடிகர் ரஜினி ஏ.ஆர் ரகுமானுடன் சேர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீர் பீர் தர்காவில் தரிசனம் செய்தார். அப்போது நடிகர் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Categories

Tech |