Categories
உலக செய்திகள்

அகதியாக வந்தவர்…. அமெரிக்க முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரி மரணம்….!!!

அமெரிக்காவில் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த மேடலின் ஆல் பிரைட் கடந்த 1948 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அதனைத்தொடர்ந்து கடந்த 1954 ஆம் வருடத்தில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம்  பணியாற்றினார். அதனையடுத்து கடந்த 1996 ஆம் வருடத்தில் அதிபராக இருந்த பில் கிளின்டன் இவரை வெளியுறவு துறை மந்திரியாக தேர்ந்தெடுத்தார். இதனால் அமெரிக்க நாட்டின் முதல் பெண் வெளியுறவுத் துறை மந்திரி என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

கடந்த 2012ம் வருடத்தில் அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் உயரிய விருதான சுதந்திர பதக்கத்தை இவருக்கு வழங்கினார். இந்நிலையில், தற்போது மேடலின் ஆல்பிரைட் தன் 84 வயதில், புற்றுநோய் காரணமாக காலமானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |