ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையில் படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சவாரி செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் வைகை அணைக்கு கோடை விடுமுறை காரணமாக திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்.இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் மகிழும் வண்ணம் அங்கு படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.படகு சவாரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையே சுற்றுலா பயணிகள் பலரும் முன்வைக்கின்றனர்.