Categories
உலக செய்திகள்

இந்த மீனா….? வேண்டாம்….. தெறித்து ஓடும் சீனர்கள்….!!

விரும்பி வாங்கும் சால்மன் மீன் வெட்டும் கட்டையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது

மீன் வகைகள் எத்தனையோ இருந்தாலும் சால்மன் மீன் என்றால் சீன மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அவ்வகையில் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அமைந்திருக்கும் சிம்பாடி சந்தையில் சால்மன் மீன் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிக மக்கள் விரும்பி சாப்பிடுவதால் நார்வே தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த வகை மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு சிம்பாடி  சந்தையில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா தொற்று   உறுதிப்படுத்தப்பட்டதை  தொடர்ந்து மொத்த விற்பனை சந்தையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் அதிக அளவு விற்கப்படும் சால்மன் மீன் வெட்டப்படும் கட்டையில் கொரோனா   வைரஸ் கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மக்கள் அதிகம் விரும்பும் சால்மன் மீன் வெட்டும் மரக்கட்டையில் வைரஸ் கண்டறியப்பட்டதால் தற்போது சால்மன் மீன் என்றாலே மக்கள் பயம் கொண்டு ஓட்டம் எடுக்கின்றனர். அங்கிருக்கும் ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் இருந்தும் சால்மன் மீன்கள் அவசரஅவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. அதோடு சால்மன் மீன்கள் இறக்குமதி செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பீஜிங்கை அடுத்து இருக்கும் தியான்ஜினில் 22 வயது வாலிபர் ஒருவர் கடல் உணவுப் பொருளை சுத்தம் செய்து கொண்டிருந்த நிலையில் அவருக்கும்  கொரோனா  உறுதிப்படுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சால்மன் மீன் கொரோனாவின்  உறைவிடம் என்கிற சந்தேகம் மக்களுக்கு உருவாகியுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹான் சந்தையை போன்று இந்த சிம்பாடி சந்தை வனவிலங்கு விற்பனை செய்வது இல்லை. இந்நிலையில் நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையத்தின் துணை இயக்குனர் கூறுகையில், சால்மன் மீன் விற்கும் சந்தையை சென்றடைவதற்கு முன்பு கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே கொரோனா  வைரஸ் சால்மன் மீன் விற்கும் சிம்பாடி  சந்தையில் தான் இருந்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். வல்லுநர்களும் இவரது கூற்றை ஒப்புக்கொள்கின்றனர்.இது குறித்து சிங்குவா பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் கூறுகையில் வைரஸ்கள் செல்களை பதிப்பதற்கான ஏற்பி பாலூட்டிகளிடம் மட்டுமே உள்ளன மீன்களிடம் கிடையாது என கூறியுள்ளார். அதேநேரம் நோய் கட்டுப்பாட்டுகாண சீன தேசிய மையத்தின் தலைமை தொற்றுநோயியல்  நிபுணர் கூறுகையில், “மீன்கள் அதன் வாழ்விடங்களில் வைரஸை பிடித்துக் கொண்டிருக்க நிச்சயம் முடியாது.

எனவே அது அவற்றின் வாழ்விடத்தை விட்டு வெளியே வருகின்ற போது அதனை கையாளும் தொழிலாளர்கள் மூலமாகவோ அல்லது போக்குவரத்தின் போது வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க முடியும் என விளக்குகின்றார். ஒட்டுமொத்தமாக கொரோனாவின் ஆதாரம் எது என்பது இதுவரை தெளிவாக தெரிய வரவில்லை. அதேநேரம் உணவு மூலமாகவும், பானங்களின் மூலமாகவும் மனிதர்களுக்கு தொற்று ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது சால்மன் மீன் வர்த்தகம் மட்டும் பாதிக்கப்படவில்லை மக்கள் வெளியில் வாங்கி ரசித்து சமைத்து ருசிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |