ஏரியில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துதனால் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குருவிப்பனை ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வீடுகள், சாக்கடை போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்களை இந்த ஏரியில் விட்டதனால் மீன் செத்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து மாசுக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தங்களின் வேண்டுகோளை முன் வைக்கின்றனர்.